Monday, May 18, 2015

வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார் சாக்ரடீசு!

 thanks to nakkkeran web
http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=253

வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார் சாக்ரடீசு!
-உடுமலை 

ந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை; வான் மதியும் மண்ணும் கடல் நீரும் நதியும் மாறவில்லை என்ற கண்ணதாசனின் திரைப்படப் பாடல் ஒன்று என்றுமே காதுகளில் ரீங்காரம் செய்யக்கூடியவை. இதன் தொடர்ச்சியாக மனிதன் மாறிவிட்டான் என்று முடியும். ஆமாம் மனிதன் மாறித்தான் விட்டான். மாறத்தான் வேண்டும். ஆனால், எப்படி மாறியிருக்கிறான்? ஜாதியாக, மதமாக, மூடநம்பிக்கையாளனாக, பெண்ணடிமையைப் பேணுபவனாக, ஆதிக்கத்திற்கு அடிபணிபவனாக... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இவ்வளவாக இருக்கிறானேயொழிய தேடிப்பார்த்தாலும் மனிதனாக இல்லையே என்றுதான் கவலையாக இருக்கிறது. அந்தக் கவலைக்கு மருந்தாக, இப்படிப்பட்ட காலகட்டத்திலும் இந்தப்பிரிவினைகள், பாகுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து  மனிதன் இருக்க முடியுமா? இருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். ஒன்றல்ல, ஆயிரமாயிரம் பேர் மனிதர்களாக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த வாழையடி வாழையாக வந்த பெரியார் சாக்ரடீசு இறந்து விட்டார். அதுவும் 44 வயதிலேயே. ஆம் அவர் சேகரித்து வைத்திருந்த அறிவையெல்லாம் நாம் இழந்து விட்டோம். அனுபவங்களை தொலைத்துவிட்டோம். இனிமேல் அவற்றைப் பயன்படுத்த இயலாது. இன்னுமவர் பல ஆண்டுகாலம் அவர் வாழ்ந்திருந்து, தனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் எவ்வளவோ பயன்பட்டிருக்க வேண்டியவர். 

08-05-2014 தியாகராயர் நகரில் இரவு நேரத்தில், சாலை விபத்தொன்றில் சிக்கி அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி 12-05-2014 அன்று இறந்து போனார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கே இது இயல்பானதுதான். ஆனாலும், மற்றவர்களைக் காட்டிலும் ஒரு பகுத்தறிவாளர் இறந்து போகும்போது கூடுதலாக மனசு  கனத்துப்போகிறது. காரணம், சமூகத்தை முற்போக்குப் பாதையில் கட்டி இழுத்துச் செல்லுகிறவர்களில் ஒருவர் குறைந்தாலும் இழப்பு தனிப்பட்ட மனிதர்களுக்கல்ல, சமூகத்திற்குத்தான். 

அப்படிப்பட்ட இழப்பை எப்படி ஈடு செய்வதென்று மக்கள் தொடர்பியலில் முதுகலை மற்றும் மதிநிறைஞர் பட்டங்களைப் பெற்றவரும், திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமைச் சிந்தனையாளருமான முனைவர் நாச்சிமுத்து, தமிழகம் அறிந்த எழுத்தாளரும், பெரியார் விருது பெற்றவருமான அஜயன் பாலா ஆகிய இருவரும் இணைந்து அவர்களின் நண்பர்களின் துணையுடன் அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கவும், ஒவ்வொரு ஆண்டும் உரியவர்களை தெரிந்தெடுத்து, பெரியார் சாக்ரடீசின் பெயரில் விருது வழங்கவும் ஏற்பாடு செய்து, 12-05-2015 அன்று கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலசில் முதலாமாண்டு நினைவு நாளை ஒரு எளிமையான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தனர். 

நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், இதழாளர்கள் மை.பா. நாராயணன், கோவி லெனின், முகில் ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் சாக்ரடீசுடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 

அறிமுகவுரையாற்றிய முனைவர் நாச்சிமுத்து அவர்கள், நெருக்கடியான காலகட்டத்தில் செம்மொழி பற்றி 10 பக்க கட்டுரையை இரண்டே மணி நேரத்தில் எழுதி கொடுத்ததையும்; பலர் எழுதி கொடுத்திருந்தாலும் இவர் எழுதியதுதான் மத்திய அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்காக செம்மொழி சிற்பிகள் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தொகுப்பை மேற்கொண்டதில் அவருடைய பங்கையும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார். 

அவரைத்தொடர்ந்து ஆன்மிகத்தில் பெரிதும் நம்பிக்கையுள்ள மை.பா. நாராயணன் அவர்கள், நட்புக்கு ஜாதி, மதம், குலம், கோத்திரம் எதுவும் தேவையில்லை என்பதை நான் சாக்ரடீசிடம்தான் கண்டுகொண்டேன் என்றார். இன்னும் ஒருபடி மேலே சென்று, பெரியார் சாக்ரடீசு மாதிரி ஒரு மனிதநேயரை ஒரு ஆன்மிகவாதியாகவே நான் இருந்தாலும் வேறு ஒருவரை என்னால் காணமுடியவில்லை என்றார் உள்ளம் திறந்து பேசினார். அவரைத் தொடர்ந்து பேச வந்த எருத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள், தாமதமாக வருகிறார்கள் என்பதற்காக, நான் யாருக்காகவும் தாமதித்துப் பேசியதில்லை. ஆனால், பெரியார் சாக்ரடீசுக்காக நான் பேச நேர்ந்தது. அது ஒரு மழைக்காலம். நிகழ்ச்சி ரஷ்யக் கலாச்சார மய்யத்தில் நடந்து கொண்டிருந்தது. இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன். பேசத்தொடங்கிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் இணங்கினேன். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற தேடல் உடையவர். இப்படிப்பட்டவர்களால்தான் நான் ஊக்கமடைகிறேன் என்றும், சாக்ரடீசு ஒரு விடிவெள்ளி போல வந்து மறைந்துவிட்டார் என்றும் நெகிழ்ந்தார்.

தொடந்து பேசிய இதழாளர் கோவி. லெனின் அவர்கள், உரசலோடுதான் எங்கள் நட்பு தொடங்கியது. திராடவிடர் கழகத்தைப்பற்றியும், இதன் தலைவரைப்பற்றியும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுவிட்டால் உடனடியாக அவற்றை ஆதாரங்களோடு மறுத்து கடிதம் எழுதிவிடுவார். எழுதியதோடு நில்லாமல் பேசியில் தொடர்பு கொட்டும் விளக்கம் அளித்துவிடுவார். அப்படி ஏற்றுக்கொண்ட கொள்கைக்கும், தலைமைக்கும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நேர்மையாக இருப்பவர் என்று பேசினார்.

முன்னதாக விருதுபெறும் ஆர்.பி. அமுதன் இயக்கிய கூடம்குளம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. எழுத்தாளர் அஜயன்பாலா அவர்கள் விருது பற்றிய விளக்கத்தை வாசித்தார். இதழாளர் முகில் விருதுபெறும் ஆர்.பி. அமுதன் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை வாசித்தார். இறுதியாக அவருக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அவர்கள், தி. பெரியார் சாக்ரடீசு நினைவு விருதை வழங்கி சிறப்பித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், பெரியார் சாக்ரடீசுக்கும் தனக்குமான முதல் சந்திப்பே மிகப்பெரிய விவாதித்தில் முடிந்ததாகவும், தொடர்ந்து தங்களுக்குள் கருத்துப்போர் நடந்துகொண்டிருந்ததாகவும் சில சம்பவங்களை சுட்டிக்காட்டினார். ஆனாலும் தங்களுக்கிடையே இருந்த நட்பு தொடர்ந்தது என்றும், தனக்கு பெரியார் விருது கிடைத்தற்கு பெரியார் சாக்ரடீசும் ஒரு காரணம் என்று நினைவு கூர்ந்தார். தொடர்ந்து ஆவணப்படங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டுவிட்டு, அமுதனைப் பாராட்டியதோடு, ஆவணப்படங்கள் தயாரிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும். அதற்கான முன்முயற்சிகளை அனைவரும் சேர்ந்து எடுக்கவேண்டும் என்றும் பேசினார். 

இறுதியாக விருதுபெற்ற ஆர்.பி. அமுதன் இந்த விருது தன்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது என்றும் வாழ்நாளில் இந்த விருது முக்கியமானது என்றும் கூறி தன்னுரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிய தொகுப்பான செம்மொழி சிற்பிகள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. வேடியப்பன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஒட்டுமொத்தமாக மாற்றுக் கருத்துள்ளவர்களும்கூட, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தாலும் அனைவருடனும் நட்பாகவும், மனிதநேயத் தன்மையுடன் இருந்த ஒருவர் மறைந்து விட்டதை இந்த கொள்கைக்கு எதிராக உள்ளவர்களேகூட தாங்கிக்கொள்ளாமல் பேசியதை காணும் பொழுது பெரியார் சாக்ரடீசு மறையவில்லை, எண்ணங்களால் மற்றவர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உணர முடிந்தது.

Thursday, May 14, 2015

விருதும் தேர்வும் – சில விளக்கங்கள்



மதிப்பீடுகள் தான் நம்பிக்கையை உருவாக்குக்கின்றன
நம்பிக்கைகள் பொய்க்கும்போது  ஊழல்கள் மலிந்து அறம் பாழ்பட்டு  சமூகம் தாழ்நிலை எய்துகிறது

ஆகவே காலத்தின் சரியான மதிப்பீடுகள் சமூகத்தின் வேருக்கு             நீரூற்று

சரியான ஆளுமைக்கு கிடைக்கும் சரியான வெளிச்சம் தொடர்ந்து    மேன்மையான சமூகத்தை உருவாக்குகிறது.

அப்படியான காரியங்களூள் ஒன்றாக நாங்கள் துவக்கியுள்ளதே பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

நம் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரளவுக்காவது  சமூக முன்னேற்றத்தில் பெயர் இருக்க்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் 60 70 ஆண்டுகளுக்கு முன் அது பெரியார் மேற்கொண்ட கடுமையான பாதை

தன்னலமற்ற அவரது தொண்டு காரணமாக தமிழக மக்கள் ப;ல நன்மைகளை பெற்றிருந்தாலும் அவரது காரியத்தை தொடர்நது செய்ய குறிப்பாக இளைஞர்கள் ,, நம் தலைமுறையினர் முன்னெடுத்து வராத காரணத்தால் சமீபமாக தமிழ்ச்சூழல் மீண்டும் புதர் மண்டிப்போய் இருளடைந்து காணத் துவங்கிவிட்டது.

மட்டுமல்லாமல் பெரியார் யார் என்றே  தெரியாமல் சிலர் அவர் புகைப்படங்களை சிறுமை படுத்தும் அற்ப  காரியங்களீல் ஈடுபடலாயினர்

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதும் மீண்டும் மனப்பிறழ்வுக்கு ஆளாகி அடிமைகளாவதும் யூதர்களுக்கு மட்டுமல் தமிழர்களுக்கும் பொருந்தும் என சொல்வது போன்ற நிலையில் தமிழ்ச்சமூகம் கருத்துருவாக்கங்களூம் சித்தாந்தங்களும் இல்லாமல் ஒரு மொன்னையான சமூகமாக மாறிவருகிறது

இந்நிலையிலிருந்து மாற்றி இன்றைய இளைஞர்களுக்கு பெரியார் உருவாக்கிய கருத்தாங்களீன் பால் ஈர்ப்புகொண்டு புதிய சூழலையும் அதற்குத்தக்கன் மாற்றங்களையும் உருவாக்க நண்பர் பெரியார் சாக்ரடீசு பெரிதும் மன வியத்தம் கொண்டிருந்தார்.

விடுதலைக் குழுமத்தில் பெரியார் பிஞ்சு என்ற குழந்தைகள் பத்ரிக்கையில் அவர் மிகுந்த ஈடுபாட்டி காட்டி பலரிடமும் அதை கொண்டு செல்ல முயற்சித்தன் காரணமும் இதுவே

ஆகவே அவரது நினைவு நாளை கொண்டாடலாம் என திட்டமிட்ட போது அவரது எண்ணங்களை தொடரச்செய்யும் வகையில் இப்படியான விருது ஒன்றை உருவாக்கி அதன் மூலம அந்த பாதையில் ஈடுபடுவர்களுக்கு தன்னம்பிக்கையும் வெளிச்சமும் உருவாக்கி தரும் நோக்கத்துடன்  துவக்கப்பட்டதே இந்த பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது.

சரி யார் யார் இந்த விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கலாம் என எங்கள் குழு   கலந்தாலோசித்த போது பலரை சென்றடையும் ஊடகத்துறை நண்பர்கள் பலர் பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் இருந்து வருவதை அறிந்திருந்த காரணத்தால் அவர்களீல் யாருக்காவது கொடுக்கலாம் என முடிவுசெய்தோம் அது போல ஊட்கம் சாராத பலர் சமூக மேன்மைக்காக் தனி நபராகவும் இயக்கமாகவும் களப்பணீ செய்து போராடி வருகின்ற்னர். அவர்களையும் இதனுள் சேர்க்கும் விதமாக பண்பாட்டுத்துறை எனற சொல்லையும் சேர்த்து ஊடகம் மற்றும் பண்பாட்டுத்துறை என இறுதி செய்து கொண்டோம்

இதற்கான ஆய்ப்பணியில் தீவிரமாக இறங்கிய போது நாமறியாத யாரேனும் ஒருவர் தன்னலமற்ற தொண்டு செய்ப்வராக இருந்தால் அவருக்கான வாய்ப்புகளை முன் வைக்கும் பொருட்டு இணையத்திலும் பரிந்துரைக்க கடந்த 4ம் தேதி முதல் அறிவிப்பு செய்திருந்தோம்
ஆனால் எதிர் பார்த்ததைவிட மிக குறைவான  பரிந்துரைகளே வந்தன.

எது எப்படி இருந்தாலும் விருது மிகச்சரியான நபருக்கு மட்டுமே போய் சேரவேண்டும் என்ற காரணத்தால் ஆய்வுபணிகளை துரிதமாக மேற்கொண்டோம் 

காலம் மிக குறுகிய அளவே இருந்த காரணத்தால்
இப்படியாக முடிவு செய்த உடனேயே எங்களுக்கு பல விதமான சிந்த்னைகள்  பலருடைய முகங்கள் வந்து போயின 

இன்றைய மிழ்ச்சூலின் கருத்து வளத்துக்காக களத்தில் நிற்கும் பல முன்னணி எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வந்து போயின

குறிப்பாக நேரடியாக கருத்துக்களத்தில் பெரியாரின் கருத்துக்களை ம்க்களிடையே கொண்டு செல்லும்  தோழர்கள் பாமரன் வே மதி மாறன் கோவி லெனின் போன்றர்களே முதன்மையாக தோன்றினர்

இதழியல் துறையில் அருள் எழிலன், கார்டீனீஸ்ட் பாலா, கவின் மலர் மற்றும் கல்வி சார்ந்த அரிய கட்டுரைகளை எழுதி வரும் பாரதி தம்பி பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த ப்ரியா தம்பி ஆகியோரும்

அது போல சுற்றுச்சூழலுக்காகவும் தமிகத்தின் இன்றைய ப்ரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் பூவுலகின் நண்பர்கள் இயக்கமும்  அம்பேத்கார் பிறந்த நாளை ஒட்டி தொடர்ந்து ஒரு மாதம் முழுக்க கூட்டம் நடத்தின பனுவல் அமைப்பும் எங்களுக்கு முதன்மையாக நினைவில் அழுத்தமாக வந்து நின்றது

கட்சி இயக்கங்களை தாண்டி தனி நபராக பசுமை நடை இயக்கம் என்ற பெயரில்  மதுரையில் அது சார்ந்த மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கி வரும் தோழர் அ,.முத்துக்கிருஷ்ணன்

பாராளுமன்றத்தில் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்த திமுக எம்பி திருச்சி சிவா அவர்களின் பெயரும் எங்கள் விவாத்த்தில் எடுத்துக்கொள்ளப்ப்ட்ட்து

படைப்பிலக்கிய துறையில்
ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் .ரெட் டீ ஆகிய நூல்களை தமிழுக்கு கொண்டு வந்த்வரும் மிளிர்கல் ஆசிரியருமான
இரா. முருகவேள் ,காடோடி நாவல் மற்றும் சூழலியல் சார்ந்த நவீன சிந்னையாளர் கவிஞர் நக்கீரன்  ஆகீயோரும்

அது போல திரைப்படத்துறையில் யாருமே செய்ய முடியாத சாதனைகளைசெய்த இரு இயக்குனர்களும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டனர் .

ஒருவர் ஜீவா திரைப்படம் மூலம் கிரிக்கட் விளையாட்டுத்துறையில் நடக்கும் ஊழ்ல்களையும் சமூக பின்னடைவுகளையும் சித்தரித்த இயக்குனர் சுசீந்த்ரன்

இரண்டாமவர் தலித்  பாத்திரத்தை மைய பாத்திரமாக்கி சென்னை வாழ் தலித்துகளின் வாழ்வை படைப்பாக மாற்றி காண்பித்த மெட்றாஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்

இவர்களோடு 

மற்றும் கல்வித்துறையின் அவலங்களை சித்தரித்த இயக்குனர் ராம்
முண்டாசுப்பட்டி படம் மூலம் மூடநம்பிக்கைகளை கேலி செய்த இன்னொரு ராம் ஆகியோரும் தேர்வு நிலையில் இருந்தனர்

அதே போல மாற்று ஊடகங்களான இறுதியாக குறும் படம் மற்றும் ஆவணப்படத்துறைகளில்  மாற்று சிந்த்னைகளுக்காக போராடும் காஞ்சனை சீனிவாசன் மற்றும் ஆர் பி அமுதன் ஆகியோரையும் கணக்கிலெடுத்துக்கொண்டோம்

இவர்களில் யாரை  தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசித்த போது அனைவரது பணிகளுமே சிறந்த பணி போற்ற தக்க பணி என்பதால் தவிர்க்க முடியாமல் சில விதிகளை தேர்வில் மேற்கொள்ள வேண்டியதாகிப்போனது

முதல் முறை இவ்விருது குழுவாக இல்லமால் தனி நபருக்கு அவர் தம் தன்னலம்ற்ற தொண்டுக்கு ஊக்கமளிப்பதாய் அமைய வேண்டும் என்ற முடிவு செய்த காரணத்தால் பூவுலகின் நண்பர்கள் உள்ளீட்ட இயக்க செயல்பாடுகளை கடந்து விருதுக்கு தேர்வு செய்ய முதல்கட்டமாய் முடிவு செய்தோம்

இரண்டவாது சுற்றில் அரசியல் மற்றும் இயக்கங்கள் சார்ந்து ஏற்கனவே பிரபலமானவர்களையும் , மூன்றாவது சுற்ரில் ஏற்கனவே அங்கீகாரமும் க்வனமும்  பெற்றிருந்த காரணத்தால் திரைப்படத்துறையினரையும் கடந்து எஞ்சியவர்களை ஆலோசித்த போது

எழுத்து இதழியல் மற்றும்  ஆவணப்படத்துறை சார்ந்தவர்களே எஞ்சினர்

அவர்களில் நிறுவனம் சார்ந்து மற்றும் ஏற்கனவே இத்துறைக்காக அங்கீகாரம் மற்றும்  விருதுகளை வாங்கியவர்களை தவிர்த்து அவர்களது பங்களிப்புகளை வைத்து பார்க்கும் போது


இறுதியாக நம் தேர்வுக்குழுவின் மூலம் ஏக மனதாக தேர்வுக்குள்ளானவர்

நம் ஆவணப்பட இயக்குனர்

ஆர் பி அமுதன் அவர்களே

தன்னலமற்ற பணி. தனித்துவம் , வெறுமனே படங்கள் எடுப்பதை கடந்த தீவிரமான மக்கள் அரசியல் ஈடுபாடு , ஈழப்ரச்னை  சூழலியல் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைப்பது ஈடுபடுவது,
ஆவண்ப்படத்தை இயக்கமாக மக்கல் முன்னே கொண்டு செல்லும் தன் முனைப்பு

வருமானமற்ற முழு நேர உழைப்பு

ஒட்டு மொத்த வாழ்வையும் மக்கள் பணிக்கான களமாக மாற்றிக்கொண்ட பெருந்தன்மை
ஆகியவற்றின் காரணமாக  இவ்விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது

சில நிர்வாக செயல்பாடுகளுக்காகவும் இணையத்தில் போதிய வரவேற்பின்மை குறுகிய காலம் காரண்மாகவும் அறிவிக்கப்ப்ட்ட இறுதி தேதிக்கு சற்று முன்னதாக தேர்வாளரை அறிவிக்க வேண்டிய நிர்பந்தமும் சூழலும் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம்

வரும் ஆண்டுகளில் இது போன்ற குறைகள் இல்லாமல் நிகழ்வை ஒருங்கு செய்ய பிரயத்தனப்படுவோம்

இந்த விழாவுக்காக பல நண்பர்கள் ஒத்துழைத்த்னர் . பெரியார் சாக்ரடீஸ் குடும்பத்தார், அவரது இளைய சகோதரர் பிரின்ஸ் என்னாரெஸ் ,சிறு உதவியானாலும் கடைசி நேரத்தில் உதவி செய்த ஸ்ரீ பதி பத்மநாபா குழுவில் இடம் வழ்ங்கியதோடு அல்லாமல் விருது குழுவோடு த்ன்னை இணைத்துக்கொண்ட வேடியப்பன் ஆகீயோருக்கு விருது குழு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது

அடுத்த வருடம் அனேகம் பெரியார் சாக்ரடீஸ் நினைவு அறக்கடளை மூலமாக விழா நிகழ்த்த்ப்படும்

நன்றி
பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது விழாக்குழு

      



     




எளிமையும் அதிசயமும் அழகுமாய் - பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015 விழா

             
                                                                                                                                                                               
   
காற்றுக்கு அசையும் ஒரு மலர், நித்திரையினூடான குழந்தையின் குமிழ் சிரிப்பு ஆகிய அற்புத தருணங்கள் நிகழ்வது போலத்தான் எளிமையும் அதிசயமும் அழகுமாய் நடந்தேறியது பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது விழா
செவ்வாய்க்கிழமை வேலை நாளான காரணத்தால் அனைவரும் வந்து சேர எப்படியும் நேரம் பிடிக்கும் என்ற காரணத்தால் அவரது ஒரு மணிநேர படமான கூடங்குளம் அணு உலை பற்றிய ரேடியேஷன் ஸ்டோரிஸ் படத்தோடு துவக்க திட்டமிட்டோம்   
முன்னாள் அமைச்சரும் பெரியார் சாக்ரடீசை நெருக்கமாக அறிந்தவருமான பரிதி இளம் வழுதி அவர்கள்  காலில் பட்ட காயம் காரணமாக திடீரென வரமுடியாத நிலையில் நேற்றே அமுதனை சந்திக்க விரும்பி வீட்டுக்கு வரவழைத்து கவுரவித்திருந்தார்.

இன்று விழாவில் அவரது இன்மையை கபோக்கும் விதமாக அரங்கினுள் எதிர்பாரவிதமாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வருகை தந்தார். இத்தனைக்கும் முறையான அழைப்புகூட இல்லாத நிலையில் இவ்விழாபற்றி கேள்விப்பட்டு அவராக வந்திருந்தார். அவரது வருகையால் அரங்கம் ஒரு மலரின் வாசத்தை எதிர்கொண்டது .மகிழ்ச்சியுடன்  அவரை எதிர்கொண்டு அழைத்து அரங்கில் அமர வைத்தோம்
சரியாக ஆறுமணிக்கு திட்டமிட்டார் போல  அமுதனின் ஆவணப்டம்  திரையிடல் துவங்கியது
தொடர்ந்து இயக்குனர் தங்கர்பச்சான் , பத்ரிக்கையாளர் மை பா நாராயணன் ஆகியோரும் வந்தனர் அரங்கமும் முழுமையாக நிறைந்தது.
வழக்கமாக இது போன்ற ஆவணப்படத்திரையிடல்களின் போது பலரும் அங்குமிங்குமாய் எழுந்து வெளியே செல்வதுண்டு ஆனல் ஆச்சர்யமூட்டும் வகையில்  அவ்வப்போது கைதட்டல்களுடன்  அரங்கம் களைகட்டிக்கொண்டிருந்த்து அமுதனின் மிக நேர்த்தியான பார்வையாளனை கட்டிப்போடும் காட்சி மொழியும் மண்ணின் மைந்தர்களது போராட்டத்தின் மேல் கொண்டிருந்த உணர்வுபூர்வமான மன எழுச்சியும்  அதற்கு காரண்ம் என்பதை அறிந்து கொண்டேன்
ஆவணப்படம் முடிந்த கையோடு விருது விழா துவங்கியது விருது கொடுக்கப்போகும் முக்கிய விருந்தினர்கள் மற்றும் விருது வாங்கப்போகும் ஆர்.பி.அமுதன் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட அவர்களும் வந்து தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்
பெரியார் சாக்ரடீஸ் குறித்த சிறு அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு கட்டுரையாக நான் வாசிக்க தொடர்ந்து ஒரு நிமிட மவுன அஞ்சலி
விருதுக்குழுவில் ஒருவரும் பெரியார் சாக்ரடீசின் நெருங்கிய நண்பருமான  டாக்டர் நாச்சி முத்து அவர்கள் இந்த விழா பற்றியும் தனக்கும் சாக்ரடீசுக்குமான உறவை பற்றியும் சுருக்கமாகவும் அழகாகவும் பேசினார்.
தமிழக அரசின் ஊழியராக அவ்வப்போது மந்திரிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் சுருக்கமாக தகவல்கள் மற்றும் கட்டுரை எழுதி தருவதில் ஆதாரங்களை தேடித்தருவதில்  இரண்டு ஆட்சிக்காலத்திலும் அவர் பாகுபாடின்றி சிறப்பாக பணிபுரிந்தார். அது அரசு வேலை என்பதைக் கடந்த அவரது ஆர்வமும் ஈடுபாடுமே அவருக்குள் இருந்து அவரை செயல்படுத்தியது. இரண்டு ஆட்சிக்காலத்திலும் பலரது முக்கியமான உரைகள் தமிழகம் முழுமைக்குமாக பயனளிக்க கூடிய சேவைகளுக்கு அவர் பின்புலனாக இருந்திருக்கிறார். செம்மொழி சிற்பிகள் நூலை பரிதி அவர்கள் ஆலோசனையின்படி நாங்கள் கொண்டுவர திட்டமிட்ட போது அதில் அவரது ஈடுபாடும் பங்களிப்பும் அபாரமானது என்றார்.
மை பா நாராயாணன் தனக்கும் பெரியார் சாக்ரடீசுக்குமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் , பழுத்த ஆத்திகரான  மை பா நாராயணன் பழுத்த நாத்திகரான சாக்ரடீசும் நண்பர்களாக முடிந்த சாத்தியத்துக்கு காரணம் பெரியார் சாக்ரடீசிடம் இருந்த மனித நேயப்பற்றே என்று கூறி தன் அவரோடு பழகிய அனுபவங்களை கூறினார்
அடுத்தாக எஸ் ராமகிருஷ்ணன் பேசிய போது இவ்விழாவில் வந்து கலந்து கொண்டதற்கான காரணம் பெரியார் சாக்ரடீஸுக்கும் தனக்குமான நட்பு எனக்கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.
ருஷ்ய கலாச்சார மையத்தில் நாள் தோறும் ஒரு எழுத்தாளர் பற்றிய உரைவிழாவின் போது தினசரி தவறாமல் உரை கேட்க வந்த சாக்ரடீசுக்கு அன்று  அலுவல் வேலை காரணமாக  பதினைந்து நிமிடம் தாமதமாக போக வேண்டிய நிர்ப்பந்தம். உடனே ராம்கிருஷ்ணனுக்கு போன் செய்த சாக்ரடீஸ் எனக்காக உரையை 15 நிமிடம் தாமதித்து துவங்க முடியுமா என கேட்டிருக்கிறார். அதற்கு எஸ் ரா வோ தனக்காக பலரும் காத்திருக்கும் சூழலில் தன்னால்  எப்படி சாத்தியப்படும் எனக்கேட்க சாக்ரடீஸ் குழந்தை போல உங்கள் உரைக்காக தினசரி ஓடோடி வருகிறேன் எனக்காக நீங்கள் இதை செய்யக்கூடாதா என குழந்தை போலகேட்க அவரது ஆர்வத்திற்கும் வாசக அனுபவத்துக்கும் மதிப்பளித்து எஸ் ரா 15 நிமிடம் அவருக்காக காத்திருந்தாக சொல்லி ஒரு வாசகனாக சாக்ரடீசின் தீவிரத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து அவரது பெயரில் கொடுக்கப்படும் முதல் விருதே மிகச்சரியான நபருக்கு செல்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறி தேர்வு க்குழுவினரை பாராட்டி நன்றி தெரிவித்தார்
அடுத்து விழா பற்றியும் விருது பற்றியும் நான் முன்பே தயாரித்து வைத்த உரையை வாசித்து இறுதியாக ஆர் பி அமுதனை தேர்வு செய்த காரணகாரியங்களை விளக்கி அவரது முக்கியத்துவத்தை கூற பலத்த கர கோஷத்துடன் ஆர்.பி.அமுதன் அவர்களுக்கு  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்  பொன்னாடை போர்த்த இயக்குனர்  தங்கர்பச்சான் விருது வழங்கி கவுரவித்தார்
பின் கவிஞரும் கொம்பு வார இதழின் ஆசிரியருமான வெய்யில் ஆர் பி அமுதன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக வாசிக்க ஆர் பி அமுத்னை பாராட்டும் வகையிலும் பெரியார் சாக்ரடீசை நினைவு கூறும் வகையிலும் பத்ரிக்கையாளர் எழுத்தாளர் நக்கீரன்  இணை ஆசிரியர் கோவி லெனின் சிற்றுரை நிகழ்த்தினார்.  தொடர்ந்து இயக்குனர் தங்கர் பச்சான் தன் சிறப்புரையை வழங்கினார். பெரியார் சாக்ரடீசுக்கும் தனக்கும் நடந்த காராசாரமான  கருத்து மோதலை பற்றிக்கூறினார். தன் வீட்டில் சாப்பிட வந்து  சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு போனதை நினைவுறுத்தி அவர் தான் கொண்ட கொள்கையின் மேல் கொண்டிருந்த உறுதியை எடுத்தியம்பினார். பின் அந்த மோதலே பெரியார் திராவிடர் கழகம் பெரியார் படம் எடுக்க விதையாக விழுந்த கதையை கூறி பெரியார் சாக்ரடீசின் முக்கியத்துவத்தை கூறினார். தொடர்ந்து இன்றைய சூழல் பற்றியும் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பணியையும் பற்றி கூறிய தங்கர்பச்சான் ஆவணப்படங்களின் முக்கியத்துவம்  பற்றி கூறி ஆர் பி அமுதன் அவர்களின் பங்களிப்பை உச்சிமுகர்ந்து பாராட்டினார் .
அமுதனின் படங்கள் சமூகத்தின் அவலங்களை சாட்டையடியாக உணர்த்துபவை இவற்றை பிட்டு படங்களை போல கம்ர்ஷியல் படங்கள் ஓடும் போதுஇணைத்து மக்களை அதிரவைக்க வேண்டும் என அதிரடியாக ஆலோசனைகள் கூறினார் . டாக்குமண்டரி படங்களுக்காக மிகபெரிய இயக்கம் அமைக்கவேண்டும் என்ற ஆதங்கமும் அவரது பேச்சில் இருந்தது.
அவர் பேசி முடித்த கையோடு விருது குழுவின் நிமித்தம் தொடர்ந்து பெரியார் சாக்ரடீசு பெயரில் அறக்க்ட்டளை துவங்கவிருப்பதற்கான் அறிவிப்பை திரு.டாக்டர் நாச்சிமுத்து அவர்கள் அறிவிக்க  
தொடர்ந்து ஏற்புரை வழங்க வந்த அமுதன் இந்த அங்கீகாரம் நான் களைத்திருக்கும் போது கிடைத்த கைதட்டல் . இது என்னை உற்சாகபடுத்தி என் பாதையில் என்னை முன்னிலும் உற்சாகமாக ஓட வைக்கிறது என்றும் கூறினார்
இறுதியாக வேடியப்பன் நன்றியுரை கூற அது வரை செவியில் உள்வாங்கி சிந்தையின் ஆழத்தில் சஞ்சரித்த  பார்வையாளர்களின் உடல்கள் இயல்பு நிலைக்கு வந்து தங்களை உணரத்துவங்க கூட்டம் மெல்ல கலையதுவங்கியது


Wednesday, May 13, 2015

invitation -2015


அமுதன் ஆர்.பி. : விருதாளர் வாழ்க்கை குறிப்பு



அமுதன் ஆர்.பி.

ஆவணப்பட இயக்குநர், ஊடகக் களப்பணியாளர்;

வயது 43; சொந்த ஊர்: பழையூர்பட்டி (மேலூர் அருகில்), மதுரை மாவட்டம்.

மதுரை மற்றும் சென்னையில் மறுபக்கம் எனும் அமைப்பின் மூலமாக ஆவணப்படங்கள் எடுப்பது, அவற்றைத் திரையிடுவது, திரைப்படவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், வகுப்புகள் நடத்துவது ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அப்பா ராமலிங்கம் ஒரு விவசாயி. நல்ல படிப்பாளி. பொது வேலைகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்த்க்கொண்டவர்.  முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்.  பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்த போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  உறுப்பினர். கட்சி வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர் கொடுத்த அரசியல் அடித்தளமே அமுதனின் ஆவணப்பட வேலைகளை பிற்காலத்தில் தீர்மானித்தது. அப்பா இப்போது உயிரோடு இல்லை.

அம்மா புஷ்பம் குடும்பத்தலைவி. மதுரையில் இருக்கிறார். அம்மாவுடன் சிறிய வயதில் பார்த்த எம்.ஜி.ஆர் படங்களே அமுதனுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவை. அம்மாவுடன் வெள்ளலூர் டெண்ட் கொட்டகையில் பார்த்த படகோட்டி, அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை, அன்பே வா ஆகிய படங்களே ஆரம்ப சினிமாப் பாடங்கள்.


கல்வி:

மதுரையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பு .

1992-1994ல் எம்.. வளர்ச்சி தொடர்பியல் (டெவலப்மெண்ட் கம்யூனிகேசன்ஸ்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .

1994-1996ல் டில்லியில் ஆவணப்படதயாரிப்புப் பயிற்சி .

ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள்.

மனைவி தாட்சா திரைப்பட மற்றும் விளம்பரத்துறையில் உடை அலங்காரக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.  இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.

ஆவணப்படங்கள்:

அமுதன் இதுவரை 19 படங்கள் எடுத்திருக்கிறார். அவற்றில் குறுகிய நேர மற்றும் முழுநீள ஆவணப்படங்கள், இசைப் படங்கள்  ஆகியன அடங்கும்.

 குடிநீர் மாவியாவால் மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர் லீலாவதியைப் பற்றி அமுதன் தயாரித்து இயக்கிய முதல் ஆவணப்படம் 1997ல் வெளிவந்தது.

1998ல்  குண்டுப்பட்டியில் காவல்துறை அத்துமீறல் பற்றி எடுத்த "தீவிரவாதிகள்" என்கிற படமும், 2003ல் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி மாரியம்மாள் பற்றி எடுத்த  "பீ" என்கிற படமும், 2006ல்  தலித் கிறிஸ்தவர்கள் பற்றி எடுத்த "செருப்பு" என்கிற படமும் 2012ல் கூடன்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் பற்றி எடுத்த  "கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்" என்கிற படமும்  அமுதன் ஆர்.பி, இயக்கிய படங்களில் அதிகக் கவனம் பெற்றவை.

அமுதன் மேலும் மயானத்தொழிலாளர்கள், மரண தண்டனை எதிர்ப்பு, கல்பாக்கம், மணவாளக்குறிச்சி, கொடைக்கானலில் மெர்குரி பாதிப்பு, திருமங்கலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம், நெடுஞ்சாலை விரிவாக்கம், தஞ்சை விவசாயிகளின் பட்டினிச்சாவு என்று பல்வேறு சமூக, அரசியல் தலைப்புக்களில் இதுவரை ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா:

1998ல் பிரதமர் வாஜ்பாய் நடத்திய  பொக்ரான் அணு குண்டு சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை நண்பர்கள் சுந்தர், லோகு, பாபு, மற்றும் கேரளாவைச் சேர்ந்த மறைந்த ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரன்  ஆகியோர் உதவியுடன்  தொடங்கப்பட்ட மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழாவை இதுவரை 17 ஆண்டுகளா, தொடர்ந்து ஒவ்வொரு டிசம்பர் 6 முதல் 10 வரை (5 நாட்கள்) பேரா முரளி, யதார்த்தா ராஜன், பாபு, பர்வதவர்த்தினி, முத்துக்கிருஷ்ணன் போன்ற  நண்பர்கள், ஆவணப்பட ஆர்வலர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் மதுரையில் இருக்கும் கல்லூரிகளில் ஆதரவுடன் மதுரையில் அமுதன் நடத்தி வருகிறார்.

மேலும் சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா, சென்னை மாதாந்தர திரையிடல், மதுரை மாதாந்தர திரையிடல், பல்வேறு தலைப்புகளில் சிறிய திரைப்படவிழாக்கள், ஆவணப்படத் தயாரிப்புப் பயிற்சி ஆகிய வேலைகளில் அமுதன் ஆர்.பி. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தற்போது அமுதன்,  கோலார் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றிய புதிய ஆவணப்படத்திற்கான ஆய்வுப்பணியில் இருக்கிறார்.


தொடர்புக்கு:

86952 79353; 99406 42044