Wednesday, June 15, 2016

திரு.ம. செந்தமிழன் - சிறு வரைவு

   2016 பெரியார் சாக்ரடீஸ் விருதாளர்
                     பன்முக பண்பாட்டு ஆளுமை
ம. செந்தமிழன் - சிறு வரைவு


ம. செந்தமிழன் தமிழ் ஊடகவியலாளர்கள் நன்கு அறிந்த பெயர் எழுத்தாளர் , திரைப்பட இயக்குனர் , பத்திரிக்கையாளர் என பன்முகங்கள் இருந்தாலும்  செம்மை எனும் அமைப்பு மூலம் தமிழ் பண்பாட்டுத்துறையில் சமீபமாக இவர் ஆற்றிவரும் சேவைகள்  முக்கியத்துவம் வாய்ந்ததும் தனித்துவமிக்கதுமாகும்  

நவீனமயமாக்கத்தின் கண்மூடித்தனமான பாய்ச்சலில் இன்று கல்வி, வேளாண்மை, உடல்நலம் போன்றவற்றின் அடிப்படையான கூறுகள் குழம்பிக்கிடக்கின்றன. இதன் மோசமான விளைவுகளைச் செந்தமிழன் பல்வேறு தளங்களில் உரக்கப் பேசிவருகிறார். பிரச்னைகளைச் சொல்வதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தமிழர்களின் தொல்மரபிலிருந்து உள்வாங்கி, அதை நடைமுறைக்கும் கொண்டுவர முயல்வது இவரது கூடுதல் சிறப்பு .

செம்மை வாழ்வியல் நடுவம்
இதன் பொருட்டு இவர் உருவாக்கிய  செம்மை வாழ்வியல் நடுவம்’’ எனும் அமைப்பு மிக பெரிய பண்பாட்டு தற்காப்பு போரை துவக்கியுள்ளது என்றால் அது மிகையில்லை

பிரண்டைத் திருவிழா
 
    குறிப்பாக் 2015ல்  சென்னையில் அந்த அமைப்பால்  நிகழ்த்தப்ட்ட பிரண்டைத் திருவிழா  தமிழர்களின் அறுபட்ட மரபு வழி வாழ்வியலை மீட்டெடுக்கும் கண்ணியாக கொண்டாட்டத் தன்மையோடு அமைந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஊர்சந்தை

         இதே செம்மை அமைப்பினரால் சென்னையிலும் சிதம்பரத்திலும் நடத்தப்படும் ஊர்சந்தை   தமிழர்களின் பாரம்பர்ய உணவு , விளையாட்டு , இசை ஆகியவற்றை சிரத்தை கூர்ந்து மீட்டுருவாக்கம் செய்து தொலைகாட்சி ,சினிமா மற்றும் காட்சி ஊடகங்களிலும் பிசா பர்கர் போன்ற அன்னிய உணவுகளிடம் உயிர்த்த வாழ்வையும்  அடையாளங்களையும் ஒரு சேர தொலைத்துக்கொண்டிருக்கும்  தமிழ் குடும்பங்களுக்கு  பாரம்பர்ய உயிரணுக்களை செலுத்தி நகரத்து தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியூட்டி வருகிறது

     மேலும் இயற்கை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையைப் பெற்றுத்தரும் நோக்கில் தமிழர்களின் பண்டைய சந்தை  வர்த்தக முறை கூட்டுமுயற்சியில் ஊர்சந்தையில்  நிகழ்த்தப்படுகிறது.

செம்மை வனம்

செந்தமிழனின் சொந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஆச்சாம்பட்டி. இங்குள்ள இவரது வேளாண்பண்ணையான ’செம்மை வனம் இயற்கையோடு இயைந்து வேளாண்மையை கற்க விரும்புபவர்களுக்கு இன்றைக்கு வழிகாட்டும் இடமாக விளங்குகிறது. கூடவே மரபு மருத்துவம், மரபுக்கட்டுமானம் குறித்த வகுப்புகளும் இங்கே நடத்தப்படுகின்றன.

இதழியல் மற்றும் ஊடகப்பணிகள்



 தினமணியில் செய்தியாளராகத் தனது இதழியல் பணியைத் தொடங்கிய செந்தமிழன்  தொடர்ந்து குமுதம், ‘மின்பிம்பங்கள்தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் சிக்கன் எமன்என்ற தலைப்பில் இவர் எழுதிய செய்திக்கட்டுரை முழுக்க முழுக்க இரசாயனச் சூழலில் பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுவதையும் அதன் அபாயத்தையும் தமிழில் முதன்முதலாகப் பதிவு செய்த ஆவணம். ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் உலகில் செந்தமிழன் ஒரு மோஸ்ட் வாண்டட்ஸ்கிரிப்ட் ரைட்டர். 2006இல் அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஆவணப்படங்கள் மற்றும் பாலை திரைப்படம்  

மௌனப்படங்களின் வரலாற்றின் ஊடே திரைப்பட முன்னோடி சாமிக்கண்ணு வின்செண்ட் குறித்து பதிவு செய்த பேசாமொழி’, ஆடு மேய்க்கும் கீதாரிகளின் வாழ்க்கையைப் பேசும் ஆடோடிகள்’, 2009இல் ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழர் இன அழிப்பில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் பங்களிப்பைச் சொல்லும் தீர்ப்பு எழுதுங்கள்’, கடல் மீன்பிடி ஒழுங்காற்றுச்சட்டம்-2010இன் மோசமான பக்கங்களைச் சொல்லும் நெய்தல்ஆகிய ஆவணப்படங்களைச் செந்தமிழன் இயக்கியுள்ளார். 2011இல் இவர் இயக்கத்தில் பாலைதிரைப்படம் வெளிவந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கைக்குள் நான்காம் ஈழப்போரைப் பொதிந்து வைத்து அழுத்தமான சில செய்திகளை அந்தப் படம் முன்வைத்தது.
எழுத்துப்பணி 




எழுத்தாளர்

செந்தமிழன் எழுதிய இனிப்புஎன்ற கட்டுரைத்தொகுப்பு சர்க்கரை நோய் என்ற பெயரில் நடத்தப்படும் மருத்துவக் கொள்ளையைச் சொன்ன முதல் தமிழ் நூல். பூமியில் முதல் மழை பெய்தபோது மரங்கள் இல்லை’, ‘அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்’, ‘கரு உரு-உயிருக்கு மரணமில்லை’, ‘நமனை அஞ்சோம்உள்ளிட்ட இவருடைய நூல்கள் வாழ்க்கை குறித்த புதிய பார்வையை வாசகர்களுக்கு வழங்குபவை. மருத்துவம், வாழ்க்கைமுறை, பண்பாடு போன்றவை சார்ந்து முக நூலில் செந்தமிழன் எழுதிவரும் பதிவுகள் உடனடி கவனத்தையும் பெருமளவிலான வரவேற்பையும் பெற்றுவருகின்றன. மரபு வாழ்வியல் குறித்த செய்திகளைத் தாங்கிவரும் வனம்என்ற மாத இதழையும் இவர் நடத்திவருகிறார். தற்போது ஆனந்தவிகடன் இதழில் தமிழ்ர்களின் மரபான வாழ்வியல் குறித்து புதிய தொடரையும் எழுத துவக்கியுள்ளார்

இத்தகைய அரும் பணிகளால் சிறந்து, பெரு மனிதராக பேறு அடைந்துள்ள ம. செந்தமிழன் அவர்களுக்கு  2016 ஆம் ஆண்டுகான பெரியார் சாக்ரடீஸ் விருது வழங்கப்படுவது விழாக்குழவினருக்கும் விருதுக்கும் மதிப்பு நிறை செயலாய் இத்தருணத்தில் உணர்கிறோம் .


இப்படிக்கு
ஒருங்கிணைப்பாளர்கள்

டாக்டர். நாச்சிமுத்து
எழுத்தாளர் அஜயன் பாலா

                         (பெரியார் சாக்ரட்டீஸ் விழா குழு )  

ம.செந்தமிழன் வாழ்க்கை குறிப்பு :

31-10- 1977ஆம் ஆண்டு தஞ்சைதஞ்சை ஆச்சாம்பட்டியில் பிறந்தவர் ம.   செந்தமிழன்.  தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் - சக   போராளியாகப் பயணிக்கும் இலட்சுமி அம்மாள்  இவருடைய பெற்றோர். செந்தமிழனின் பணிகளுக்குத் தோள்கொடுக்கும் வாழ்க்கைத்துணையாக அவருடைய மனைவி காந்திமதி செயல்படுகிறார். இவர்களுக்கு நிகரன் என்ற மகனும்அருவிமுல்லை என இரு மகள்களும் உள்ளார்கள்.









1 comment:

  1. Valzthukkal Sakothara, ungal pani madrum ungal valviyal payanam siraka en manamarntha valzthukkal.....

    ReplyDelete