Sunday, July 23, 2017

விருது குறித்து சிறு வரைவு

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது
          நெ.6/10,பாஸ்கர் தெரு, நேரு நகர் தசரதபுரம்,சென்னை-93, 98840 60274

விருது குறித்து சிறு வரைவு
    திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12ம் நாள்  சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.
  பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு தமிழக அரசு இதழிலும் செய்தியாளராக  அரசுப் பணி செய்து வந்தார்.
  சீரியபண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே  வாழ்ந்து காட்டியவர் .
  2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சிமுத்து எழுத்தாளர் திரு.அஜயன்பாலா ஆகியரோடு இதழாளர் திரு.பெரியார்சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.
  இந்நூலை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.
  அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அவரோடு நெருங்கி பழகிய டாக்டர் திரு.நாச்சிமுத்து, எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியோர் இணைந்து “பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது”  எனும் ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள  முடிவு செய்தோம்

 அதன்படி வருடா வருடம் ஊடகம், இதழியல், இணையம், பண்பாடு சமூக சேவை மற்றும் கலாச்சார பணிகளில்  அர்ப்பணிப்புடன் சீரிய தொண்டாற்றி வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது கடந்த இரண்டு ஆண்டுகளின்  விழாக்கள் மற்றும் விருது பெற்றவர்களின் விவரங்களுக்கு  www.periyarsocratesvirudhu.blogspot.com க்ளீக் செய்யவும்

இப்படிக்கு .

டாக்டர். நாச்சிமுத்து
எழுத்தாளர்அஜயன் பாலா

          பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு
தொடர்புக்கு : 9884060274


No comments:

Post a Comment